RE Himalayan – ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 என்ஜின் விபரம் வெளியானது

வரும் அக்டோபர் 1 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 பைக்கின் என்ஜின் விபரம் ஆர்டிஓ பதிவு தகவல் மூலம் கசிந்துள்ளது.

Royal Enfield Himalayan 452

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் பைக்கில் 40 hp பவரை வெளிப்படுத்தும் புதிய 451.65சிசி லிக்யூடு கூல்டு என்ஜின்  பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 40-45Nm வரை டார்க் வெளிப்படுத்தலாம்.இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் மற்றும் சிலிப்பர் கிளட்ச் கொண்டிருக்கலாம்.

ஹிமாலயன் 450 முன்பக்கத்தில் 21 இன்ச் சக்கரமும், பின்புறத்தில் 17 இன்ச் வீலும் கொடுக்கப்பட்டு பைக்குகளின் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள், டூயல் சேனல் ஏபிஎஸ் இருக்கும். ஹிமாலயன் 450 இன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 220 மிமீ இருக்கலாம்.

 

வட்ட வடிவ TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று டிஜிட்டல் டேகோமீட்டர் அலகினை வெளிப்புற சுற்றளவை கொண்டு கியர்-பொசிஷன் இன்டிகேட்டர் மையத்தில் அமைந்துள்ளது. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் கியர் இண்டிகேட்டரின் வலதுபுறத்திலும் மற்றும் எண்கள் மிகப் பெரிய எழுத்துருவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

royal enfield guerrilla 450 himalayan 1

Royal Enfield Himalayan Guerrilla 450

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.