இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்ட கலைஞர் விஜய் ஆண்டனி.
இரண்டு நாட்களுக்கு முன்பு அவருடைய மூத்த மகள் மீரா தற்கொலை செய்து இறந்த சம்பவம் அனைவரையுமே அதிர்ச்சியடைய செய்திருந்தது. திரையுலகினர், பொதுமக்கள் என பல தரப்பினரும் விஜய் ஆண்டனியின் மகளுக்கு தங்களின் இரங்கல்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், விஜய் ஆண்டனியே தனது மகளின் இறப்பு குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அன்பு நெஞ்சங்களே,
என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள்.
அவள் இப்போது இந்த உலகைவிட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்றிருக்கிறாள்.
என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள்.
அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன்.
அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்.’ என விஜய் ஆண்டனி அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். விஜய் ஆண்டனியின் அறிக்கை வெளியாகியிருக்கும் நிலையில் பலரும் அவருக்கு ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.