வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் | கோவை பொருட்காட்சியில் `நோவாவின் பேழை' – News In Photos

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் அமலைச்செடிகளை அகற்றக் கோரி, விவசாயிகள் கோரிக்கை!
பி.ஹெட் சேர்க்கை 2023-2024 ஒற்றை சாளர முறை கலந்தாய்வு நடைபெற்றது.

இடம்: சென்னை வில்லிங்டன் சீமாட்டி கல்வியல் மேம்பாட்டு நிறுவனம்.

தேனி மாவட்டம்,
கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனையை ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில், இனப்பெருக்கத்துக்காக மரத்தில் கூட்டமாய் அமர்ந்திருக்கும் பட்டாம்பூச்சிகள்.
விருதுநகர் மாவட்டம், கல்குறிச்சி அருகே ஆடுகளுடன் மேய்ச்சலுக்குச் செல்லும் பாட்டி.
தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மினி பொக்லைன் இயந்திரம் மூலமாக கழிவுநீர் வழித்தடத்தை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விருதுநகர்:

அனைத்து வங்கிகளின் சார்பில் நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.4.11 கோடிக்கான கல்வி கடன் பெறுவதற்கான ஆணையை, ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.

கோவையில் வ.உ.சி மைதானத்தில் நடைபெறவிருக்கும் பொருட்காட்சிக்கு, கப்பல் (நோவாவின் பேழை) வடிவில் நுழைவாயில் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை அண்ணா சாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தை, மின்வாரிய கேங் மேன் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
சேலத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் சங்கர் பார்வையிட்டார்.
சென்னை முதல் நெல்லை வரையிலான வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி:

கேரளா – திருவனந்தபுரம் இடையிலான ரயி்ல் வழித்தடத்தில் நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை பணிகள்.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது.
புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்துக்கு முதுநிலை படிப்புக்கு பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியதையடுத்து, பேராசிரியர்கள் முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.