இஸ்லமாபாத்,
பாகிஸ்தானில் வரும் ஜனவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்டது.தற்போது பாகிஸ்தானில் காபந்து பிரதமராக எம்பி அன்வர்-உல்-ஹக் கக்கர் உள்ளார்.
இந்த நிலையில் , பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் மாதம் தேர்தல் முதலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி மாதம் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :