தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: உச்சநீதிமன்றம்| Crackers can be burst only for 2 hours on Diwali: Supreme Court

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ‘சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம்; அதுவும் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையில் உலகம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் சரவெடி மற்றும் பேரியம் மூலப்பொருளில் தயாராகும் பட்டாசுகளுக்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

latest tamil news

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம்; அதுவும் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி’ என உத்தரவிட்டு, பேரியம், சரவெடி தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்தது. வெறும் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க சில ஆண்டுகளாக தொடர்ந்த உத்தரவே இந்தாண்டும் நீடிப்பதால், தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி காத்திருந்த பட்டாசு தொழிலாளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.