புதுடெல்லி,
ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நாளை தொடங்குகின்றன. ஆனால் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி விட்டது.
இந்த நிலையில், ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது. 3 வீராங்கனைகள் பங்கேற்க அனுமதி மறுத்ததற்காக சீனாவிற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கையால் ஆசிய விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்கவிருந்த மத்திய மந்திரி அனுராக் தாக்கூரின் சீன பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.