கிறுக்குத்தனத்திற்கும் எல்லை உண்டு – கூல் சுரேஷை எச்சரித்த ஐஸ்வர்யா
சினிமா நடிகர் கூல் சுரேஷ் சமீபத்தில் மன்சூர் அலிகான் பட விழாவில் கலந்து கொண்ட போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினிக்கு பலவந்தமாக மாலை அணிவித்தார். இதனால் எரிச்சலடைந்த ஐஸ்வர்யா மேடையிலேயே மாலையை கழட்டி வீசி தனது அதிருப்தியை காட்டியிருந்தார். இதை தவறு என மன்சூர் அலிகானும் மேடையிலேயே சுட்டிக்காட்ட தொடர்ந்து கூல் சுரேஷுக்கு எதிராக பலரும் கண்டித்து பதிவிட்டு வந்தனர். இதனையடுத்து கூல் சுரேஷும் மன்னிப்பு கேட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசி உள்ள ஐஸ்வர்யா, 'இப்போதும் அதிர்ச்சியாக இருக்கிறது. என் தோள்பட்டையை பலவந்தமாக அழுத்தி திடீரென்று அப்படி நடந்து கொண்டார். அந்த ஆள் கண்ணத்தில் அப்போதே பளார் என்று அடிக்கொடுக்காமல் விட்டுவிட்டோமே என்று நினைக்கிறேன். கிறுக்குத்தனத்திற்கும் ஒரு எல்லை உண்டு. தனிபட்ட நபரை பாதிக்காதபடி இருக்க வேண்டும். இதற்கு முன்பும் ஒரு நிகழ்ச்சியில் இப்படி தான் என்னிடம் நடந்து கொண்டார். இன்னொரு முறை இதுபோல் அவர் என்னிடம் நடந்து கொண்டால் போலீசில் புகார் அளிப்பேன்' என எச்சரித்து பேசியுள்ளார்.