விராட், சச்சின் பற்றி பேசவே இல்லை – ஆடம் கில்கிறிஸ்ட் புலம்பல்

விராட் கோலிக்கு ஓய்வு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர பிளேயர் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. விரைவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் தொடங்க இருப்பதால், அதில் புத்துணர்ச்சியுடன் விளையாட வேண்டும் என்பதற்காக பிசிசிஐ விராட் கோலியுடன் கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வளித்துள்ளது. அனைவரும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு திரும்ப இருக்கின்றனர். இதை வைத்து டிவிட்டரில் பெரும் சர்ச்சை ஓடிக் கொண்டுள்ளது.

சர்ச்சை என்ன?

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி வரிசையாக முறியடித்துக் கொண்டு வருகிறார். அதிவேக சதம் மற்றும் ரன்கள் என பல சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கும் விராட் கோலி, ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்திருக்கும் சச்சின் டெண்டுல்கரின் சாதனைக்கு மிக நெருக்கத்தில் இருக்கிறார். எதிர் வரும் உலக கோப்பையில் இந்த சாதனையை அவர் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அவர் இந்த சாதனை குறைந்த போட்டியில் செய்துவிடக்கூடாது என்பதற்காகவே ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

கில்கிறிஸ்ட் பெயரில் போலி செய்தி

(@gilly381) September 20, 2023

இதில் உட்சபட்சமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கில்கிறிஸ்டும் இதை குறிப்பிட்டு பேசி, விராட்கோலிக்கு ஆஸ்திரேலிய தொடரில் ஓய்வளித்ததற்கு அதிருப்தி தெரிவித்தாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இதனைப் பார்த்த கில்கிறிஸ்ட் செம ஷாக்காகியுள்ளார். நான் ஒருபோதும் அப்படி பேசவே இல்லை என உடனடியாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் விளக்கமும் கொடுத்துள்ளார். 

சச்சின் சாதனை முறியடிப்பு

அண்மையில் நிறைவடைந்த ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்திருந்தார். அதில் அதி வேகமாக 13 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இதற்கு முன்பாக சச்சினிடம் இந்த சாதனை இருந்தது. அவர் 321 இன்னிங்ஸில் 13 ஆயிரம் ரன்களை எட்டியிருந்தார். ஆனால் விராட் கோலி 267 இன்னிங்ஸிலேயே இந்த சாதனையை முறியடித்துவிட்டார். 

ராகுல் டிராவிட் விளக்கம்

கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடமும் கேட்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த அவர், ஆசிய கோப்பையில் விளையாடிய மூத்த வீரர்களுக்கு ஓய்வளிப்பது குறித்து அவர்களிடம் ஆலோசனை செய்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது. தன்னிச்சையாகவோ அல்லது வேண்டுமென்று அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படவில்லை. உலக கோப்பையில் இந்திய அணிக்கு அவர்கள் சிறப்பாக பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக ஓய்வில் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். இருப்பினும் டிராவிட்டின் விளக்கத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.