வாரணாசி இன்று பிரதமர் மோடி வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இன்று பிரதமர் மோடி, தான் போட்டியிட்டு ஜெயித்த வாரணாசி தொகுதியில், விளையாட்டு பிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாகச் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். இதையொட்டி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.121 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை வாரணாசியில் கையகப்படுத்தி கொடுத்து உள்ளார். அங்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.330 கோடியில் சர்வதேச தரத்துடன் பிரமாண்ட விளையாட்டரங்கத்தை நிறுவ உள்ளது. […]