மூன்றாம் போக சிறுதானிய விதைப்பில் தாம் எதிர்பார்த்த விளைச்சலைப் பெற்றுள்ளதாக பாவற்குள விவசாயிகள் மகிழ்ச்சி.

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயளாலர் பிரிவிற்குட்பட்ட பாவற்குளம் யுனிட் 4,5,6 ​பகுதியில் மூன்றாவது போகமாக விதைக்கப்பட்டு அறுவடைக்கு தயாராகவிருக்கும் விளைநிலங்களை மாவட்ட செயலாளர் இன்று பார்வையிட்டார்

சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் 45 விவசாயிகள் இணைந்து உளுந்து, கௌப்பி, பயறு போன்ற சிறுதானியங்களை பயிரிட்டு அமோக விளைச்சலைப் பெற்றுள்ளனர்.

குறித்த போகத்திற்கு தேவையான நீரை தாம் செட்டிக்குளம் பெரிய நீர்ப்பாசன திணைக்கள அனுசரணையின் கீழ் பெற்றுக் கொண்டதாகவும் தகுந்த காலத்திற்கு கிடைத்த அறிவுரை மற்றும் சரியான காலஇடைவெளியில் கிடைக்கப்பெற்ற அளவான நீர் போன்றவை நீர்ப்பாசனத் திணைக்களத்தால் தமக்கு வழங்கப்பட்டமையே குறித்த இரட்டிப்பு விளைச்சலை தாம் பெற்றுக் கொள்ள காரணம் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த போகத்தினூடாக ஏக்கருக்கு கௌப்பி 200 கிலோகிராம், பயறு 300 கிலோகிராம் மற்றும் உளுந்தில் 400 கிலோகிராம் விளைச்சல் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது மாவட்ட செயலாளர் திரு.P.A. சரத்சந்ர அவர்களுடன் நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர், பொறியியளாலர், திட்ட முகாமையாளர் மற்றும் விவசாயிகள் பலரும் சமூகமளித்து தமது கருத்துக்களை பகிர்ந்திருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.