வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹாங்சோ: 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில்,மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகளுக்கான துப்பாக்கி சுடுதலில் வெள்ளி பதக்கத்தையும், படகுப் போட்டியில் 2 பதக்கம் உள்பட 5 பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Tamil_News_large_3439595.jpg)
துப்பாக்கி சுடுதல்
மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகளுக்கான துப்பாக்கி சுடுதலில் இந்தியா வெள்ளி வென்றது. ரமிதா, அஷி சோக்ஸி, மெகுலி ஜோடி 1886 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றது. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா வெண்கலம் வென்றார்.
படகுப் போட்டி
துடுப்பு படகுப் போட்டியில் அர்ஜூன் லால், அர்விந்த் சிங் ஜோடி வெள்ளி வென்றது. ஆண்களுக்கான போட்டியில் பாபு யாதவ் மற்றும் லேக் ராம் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றனர். அதேபோல், 8 வீரர்கள் அடங்கிய இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றிருந்தது. இதனால் இந்தியாவுக்கு 5வது பதக்கம் கிடைத்துள்ளது.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/gallerye_095847994_3439595.jpg)
கிரிக்கெட்டில் பதக்கம் உறுதி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணி பைனலுக்கு முன்னேறியது. அரையிறுதியில் வங்கதேச மகளிர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. பைனலுக்கு முன்னேறியதை அடுத்து வெள்ளி அல்லது தங்க பதக்கத்தை இந்தியா உறுதி செய்துள்ளது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement