வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: பாகிஸ்தானில் கிட்டதட்ட 40 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் பார்லி., கடந்த ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடைசியில் பொது தேர்தல் நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் புதிய தேர்தலுக்கு முன்னதாக பாகிஸ்தானின் அடுத்த அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், தற்போதைய நிலைமை குறித்தும் உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
வறுமை
இது குறித்து, உலக வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பணவீக்கம், மின்சார விலை உயர்வு மற்றும் போதுமான பொது வளங்கள் இல்லாதது உள்ளிட்ட பல பொருளாதார நெருக்கடிகளை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. இந்த மக்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் பரிதவிக்கின்றனர். ஒரே ஆண்டுக்குள் 34 சதவீதமாக இருந்த பாகிஸ்தானின் வறுமைக் கோட்டின் அளவு இப்போது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.
32 முதல் 40 சதவீதம் வரை ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரியல் எஸ்டேட் மீது வரி விதிக்க அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, வீண் செலவினங்களைக் குறைக்க வேண்டும். பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் உள்ளது. பாகிஸ்தான் பருவநிலை மாற்ற தாக்கங்களால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இருந்தபோது, பாகிஸ்தான் பல பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டது. பணவீக்கம் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு ஒரு மாத கட்டுப்படுத்தப்பட்ட இறக்குமதிகளை ஈடுகட்ட போதுமானதாக இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement