செப்டம்பர் 28ல் கடும் போட்டி?

2023ம் வருடத்தின் முக்கால் வருடம் இன்னும் ஒரு வாரத்தில் முடிய இருக்கிறது. அடுத்த கால் வருடத்தில் சில பல முக்கியமான திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அக்டோபர் மாதம் விஜயதசமி, நவம்பர் மாதம் தீபாவளி, டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினம் ஆகிய விடுமுறை நாட்களில் அப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று செப்டம்பர் 22ம் தேதி ஆறு சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியானது. அவற்றுடன் சேர்த்தால் இந்த வருடத்தில் இதுவரையிலும் 170 படங்கள் வெளியாக உள்ளன. அடுத்த கால் வருடத்தில் 30 படங்களுக்கும் மேல் நிச்சயம் வெளியாகும். அதனால், இந்த வருடத்தில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடக்கப் போவது உறுதி.

செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரமான அடுத்த வாரத்தில் சில முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. ராகவா லாரன்ஸ், மகிமா நம்பியார், வடிவேலு நடிக்கும் 'சந்திரமுகி 2', ஜெயம் ரவி, நயன்தாரா நடிக்கும் 'இறைவன்', சித்தார்த், நிமிஷா சஜயன் நடிக்கும் 'சித்தா' ஆகிய படங்கள் முக்கியமானவை. இப்படங்களுக்கு இடையில்தான் போட்டி அதிகம் இருக்கும். இவை தவிர சினேகா, வெங்கட் பிரபு, யோகிபாபு நடித்துள்ள 'ஷாட் பூட் த்ரீ' உள்ளிட்ட இன்னும் சில சிறிய படங்கள் அன்றைய தினம் வெளியாக உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.