ஹைதராபாத்: தெலங்கானா மாநில தலைமை தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தெலங்கானா அரசின் பதவிக்காலம் வரும் டிசம்பரில் முடியவுள்ளது.
எனவே, அடுத்த 3 மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும். 15 லட்சம் வாக்காளர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 6.99 லட்சம் பேர் இளைஞர்கள். பெண் வாக்காளர்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக மாவட்ட அளவில் விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.
வரும் அக்டோபர் மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் தலைமை தேர்தல் ஆணைய குழு தெலங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.