துருவ் விக்ரமை இயக்கும் மாரி செல்வராஜ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!!
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ். தற்போது வாழை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை அவர் இயக்கப் போகிறார். இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தின் டெக்னீசியன் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது.
துருவ் விக்ரமின் பிறந்தநாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆதித்ய வர்மா, மகான் போன்ற படங்களில் நடித்துள்ள துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கும் இந்த படத்திற்காக பல மாதங்களாக கபடி விளையாட்டு பயிற்சி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.