‘பேய்’ பொம்மையை கைது செய்த போலீஸார்: மெக்சிகோவில் விநோதம்

மான்க்லோவா: ‘சக்கி டால்’ எனப்படும் பேய் பொம்மையை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபரையும் அவருடன் இருந்த பொம்மையையும் மெக்சிகோ போலீஸார் கைது செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மெக்சிகோவின் கோஹுயிலா மாகாணத்தில் உள்ள மான்க்லோவா நகரத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்லோஸ் என்ற நபர் பொம்மை ஒன்றின் கையில் கத்தியை வைத்து சாலையில் போவோர் வருவோர் மீது தூக்கி வீசி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து கார்லோஸை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்த அந்த பொம்மைக்கும் கைவிலங்கிட்டு கைது செய்தனர். இந்த விநோத சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. பொம்மையை வைத்து பொதுமக்களை அச்சுறுத்திய கார்லோஸ் போதைப் பொருள் உட்கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் உள்ளூர் நிருபர்கள் சிலர் விளையாட்டுத்தனமான அந்த பொம்மைக்கு கைவிலங்கு போடுமாறு கூறியதால், போலீஸ் அதிகாரி ஒருவர் விளையாட்டாக அந்த பொம்மையையும் கைது செய்தததாகவும், தற்போது அந்த அதிகாரி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் மான்க்லோவோ போலீஸார் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட அந்த பொம்மை ‘சைல்ட்’ஸ் ப்ளே’ ஹாலிவுட் படவரிசையில் வரும் ‘சக்கி டா’ எனப்படும் பேய் பொம்மை ஆகும். விகாரமான முகம் கொண்ட இந்த பொம்மை உலக அளவில் பிரபலமானது. ’சைல்ட்’ஸ் ப்ளே 1,2,3, ‘கல்ட் ஆஃப் சக்கி’, ‘தி டால்ஹவுஸ்’, ‘கர்ஸ் ஆஃப் சக்கி’, ‘ப்ரைட் ஆஃப் சக்கி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இந்த பொம்மை இடம்பெற்றுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.