வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லிமா: பெருவில் எரிவாயு குழாய் பணிக்காக பள்ளம் தோண்டியபோது, பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த மம்மிக்கள் எனப்படும், பதப்படுத்தப்பட்ட மனித உடல்களுடன், பண்டைய காலப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.
தென் அமெரிக்க நாடான பெருவில், கலிடா என்ற தனியார் நிறுவனம் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்து வருகிறது.
இதற்காக, தலைநகர் லிமாவில் எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, அங்கு பள்ளம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது தொழிலாளர்கள் தோண்டிய பள்ளத்தில், பதப்படுத்தப்பட்ட நிலையில் எட்டு மனித உடல்கள் மற்றும் அரிய வகை பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.
இந்தப் பொருட்களை ஆய்வு செய்த அகழ்வாராய்ச்சியாளர்கள், இவை, 12ம் நுாற்றாண்டில் வாழ்ந்த, இன்கா பேரரசு காலத்தைச் சேர்ந்தவை என்பதை கண்டறிந்தனர்.
பதப்படுத்தப்பட்ட நிலையில் எட்டு மனித உடல்களுடன், வெள்ளி நாணயங்கள் உட்பட பல்வேறு அரிய பொருட்களும் கிடைத்துஉள்ளன. ஏற்கனவே, பல்வேறு இடங்களில் பண்டையகாலப் பொருட்கள் கிடைத்த நிலையில், 400க்கும் மேற்பட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement