Amazon Great Indian Festival Sale 2023: இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நிறைவடைந்துவிட்ட நிலையில் அடுத்து நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என நாடு முழுவதும் கொண்டாட்டம் களைகட்டும். அந்த வேளையில், பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட் போன்றவறை பல்வேறு தள்ளுபடியை அறிவிப்பார்கள்.
சாம்சங் கேலக்ஸி S23 மற்றும் இன்டெல்
அந்த வகையில், பிளிப்கார்ட் தனது விற்பனை குறித்த தேதியை அறிவிக்க உள்ள நிலையில், அமேசான் தனது கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2023 குறித்து அறிவித்துள்ளது. இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீங்கள் எதிர்பார்ப்பது போல, ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், கேஜெட்டுகள் மற்றும் பிற வகைகளில் எலக்ட்ரானிக் தயாரிப்புகளில் பெரும் தள்ளுபடியை விற்பனை நடைபெறும்.
இருப்பினும், அமேசான் விற்பனையின் சரியான தேதியை வெளியிடவில்லை. குறிப்பாக, இது அக்டோபர் தொடக்கத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு, விற்பனை முன்கூட்டியே தொடங்கும். இந்த ஆண்டு விற்பனை சாம்சங் கேலக்ஸி S23 மூலமும் மற்றும் இன்டெல் மூலமும் வழங்கப்படுகிறது. கேலக்ஸி S23 மற்றும் இன்டெல்-ஆல் இயங்கும் மடிக்கணினிகளில் நல்ல சலுகைகளை எதிர்பார்க்கலாம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் விற்பனையில் வாங்குபவர்கள் எஸ்பிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் 10 சதவீதம் தள்ளுபடி பெறுவார்கள். அமேசான் பே கார்டு உள்ளவர்களுக்கும் கேஷ்பேக் சலுகைகள் கிடைக்கும். ஒரு கார்டு பயனர்கள் கிரெடிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளில் 2,250 உடனடி தள்ளுபடிகள் வரை பெற தகுதியுடையவர்கள். HDFC, HSBC, IDFC First Bank மற்றும் Yes Bank கார்டுகளில் உடனடி தள்ளுபடி சலுகைகள் இருக்கும்.
இவை மட்டுமின்றி அமேசான் டெலிவரியில் பணம் செலுத்துதல், UPI மற்றும் பல போன்ற எளிதான கட்டண ஆப்ஷன்களை வழங்கும். சில தயாரிப்புகளுக்கு ‘ஈஸி ரிட்டர்ன்ஸ்’ வசதியும் வழங்கப்படும் என அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தள்ளுபடி விலையில் மொபைல்கள்
ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன் உதிரிபாகங்கள் மீது 40 சதவீதம் வரை அமேசான் தள்ளுபடியை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு ரூ.7 ஆயிரம் வரை மதிப்புள்ள கூப்பன் சலுகைகள் இருக்கும். குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு நோ காஸ்ட் EMI விருப்பமும் இருக்கும். Realme Narzo 60x 5G, OnePlus Nord CE 5G, OnePlus 11 5G, Samsung Galaxy S23 சீரிஸ், iPhone 14, iQOO Z7 Pro 5G, Tecno Pova 5 Pro 5G உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
அமேசான் விற்பனையில் சில புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள ஸ்மார்ட்போன்களும் வரும் என எதிர்க்கப்படுகிறது. அதன்படி, இது புதிய Tecno Phantom V Flip 5G, Samsung Galaxy S23 FE மற்றும் Honor 90 5G ஆகியவற்றை நீங்கள் குறைந்த விலையில் இந்த விற்பனையில் வாங்குவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
பிற தள்ளுபடிகள்
அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேலில் கேமிங் மடிக்கணினிகளில் 40 சதவீதம் வரை தள்ளுபடியும், டேப்லெட்டுகளுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படும். அணியக்கூடிய பொருட்கள் போன்ற கேஜெட்டுகளுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும், ஸ்மார்ட்வாட்ச்கள் 899 ரூபாயில் தொடங்குகின்றன. கேமரா மற்றும் துணைக்கருவிகளுக்கு விற்பனையில் 80 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR