ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 400 ரன்கள் அடிப்பது என்பதெல்லாம் மலையளவு சாதனையாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், 20 ஓவர் கிரிக்கெட் வந்தபிறகு அந்த வியப்பு எல்லாம் ஓடிவிட்டது. ஏனென்றால், சிறப்பான பேட்டிங் இருந்தால் 400 ரன்களை ஈஸியாக அடிக்கலாம். இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் அவ்வப்போது 400 ரன்களை அடிப்பதை இப்போது பார்க்க முடியும். அந்தவகையில் இதற்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எத்தனை அணிகள் 400 ரன்களை அடித்திருக்கிறார்கள், அதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் எத்தனை முறை 400 ரன்களை கடந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்,.
ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 7 அணிகள் மட்டுமே 400+ ரன்களை குவித்துள்ளன. அதில் தென்னாப்பிரிக்கா அணி அதிக முறை 400 ரன்கள் அடித்த அணியாக முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியா இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது.
ஜிம்பாப்வே – 1 முறை: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி கத்துக்குட்டி அணியாக பார்க்கப்பட்டாலும் அந்த அணி 400 ரன்கள் ஒருமுறை அடித்திருக்கிறது. ஜிம்பாப்வேயில் நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிரான ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் அந்த அணி 400 ரன்களை அடித்தது.
நியூசிலாந்து 1 முறை: எப்போதும் கணிக்க முடியாத அணியாகவே இருக்கும் நியூசிலாந்து அணி ஒருமுறை ODI-ல் 400 ரன்களை அடித்திருக்கிறது. 2008 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் பிளாக் கேப்ஸ் 400 ரன்களை விளாசியது.
இலங்கை – 2 முறை: மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களை கொண்டிருக்கும் இலங்கை அணி 2 முறை 400 ரன்களை அடித்திருக்கிறது. ஜெய்சூர்யா மற்றும் சங்ககரா ஆகியோர் விளையாடியபோது 2006 ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிராக முதன்முறையாக 400 ரன்களுக்கும் மேலாக அடித்தது. அதன்பிறகு இந்திய அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சேஸிங்கின்போது 400 ரன்களை அடித்து வெற்றிக்கு மிக அருகாமையில் வந்து தோல்வியை தழுவினர்.
ஆஸ்திரேலியா – 2 முறை: கடந்த தசாப்தத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அசைக்க முடியாத அணியாக இருந்த ஆஸ்திரேலிய அணி இருமுறை 400 ரன்களுக்கும் மேல் அடித்திருக்கிறது. அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 400 ரன்களை அடித்த முதல் அணியும் ஆஸ்திரேலியா தான். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான வரலாற்று சிறப்பு மிக்க கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக ஆஸ்திரேலியா 400 ரன்களுக்கும் மேல் அடித்தது. ஆனால் அப்போட்டியில் தென்னாப்பிரிக்கா சேஸிங் செய்தது என்பது இன்னொரு வியப்பான விஷயம். இரண்டாவது முறையாக 2015 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அடித்தது.
இங்கிலாந்து – 5 முறை: அண்மைக்காலமாக ஆக்ரோஷமான ஆட்டத்தை கிரிக்கெட்டின் அனைத்து பார்மேட்டுகளிலும் காண்பித்து வரும் இங்கிலாந்து அணி 5 முறை 400 ரன்களை விளாசியிருக்கிறது. ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை குவித்த அணியாகவும் இங்கிலாந்து தான் இருக்கிறது. அந்த அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக 4 விக்கெட் இழப்புக்கு 498 ரன்களை அடித்திருக்கிறது. நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராகவும் இங்கிலாந்து 400 ரன்களுக்கும் மேல் விளாசி தள்ளியிருக்கிறது.
இந்தியா – 6 முறை: இந்திய அணியும் 6 முறை 600 ரன்களுக்கும் மேல் அடித்திருக்கிறது. அதிக முறை 400 ரன்கள் அடித்த அணிகளின் பட்டியலில் 2வது இடத்திலும் இருக்கிறது. சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் ஆகியோர் விளையாடும்போதே 400 ரன்கள் கிளப்பில் இந்தியா இணைந்துவிட்டது. பெர்முடா, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா, இலங்கை (இரண்டு முறை), வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு எதிராக இந்தியா 400 ரன்களை அடித்திருக்கிறது.
தென்னாப்பிரிக்கா – 7 முறை: இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணி தென்னாப்பிரிக்கா. முதன்முறையாக ஆஸ்திரேலிய அணி 400 ரன்களுக்கும் மேல் அடித்தபோது, அதனை சேஸ் செய்து வரலாற்று சாதனை படைத்தது. அதன்பிறகு மீண்டும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 400 ரன்களுக்கும் மேல் அடித்தது. மேலும், இலங்கை (இரண்டு முறை), இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக 400 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR