டெல்லி: Parineeti Raghav Wedding (பரிணிதி சோப்ரா திருமணம்) பாலிவுட் நடிகை பரிணிதி சோப்ரா தனது காதலரான ராகவ சத்தாவை இன்று திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ராவின் தங்கை பரிணிதி சோப்ரா. 2011ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சாம்கிலா, கச்சுலா கில் உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார்.