‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ படங்களை இயக்கிய ஐ. அஹமது இயக்கத்தில் ஜெயம்ரவி, நயந்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறைவன்’.
சைக்கலாஜிக்கல், க்ரைம் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான இது வரும் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டையொட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ஜெயம் ரவி, ஐ. அஹமது, விஜய்சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டு பேசியிருந்தனர். இதில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, விஜய்சேதுபதியை வைத்து படம் இயக்குவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/F6zoyCea0AAUfzX.jpeg)
இது குறித்துப் பேசிய ஜெயம் ரவி, “விஜய்சேதுபதி பேசும்போது, ‘மோகன் ராஜா சார் அலுவலகத்திலும், எம்.குமரன் படத்திலும் ஜெயம் ரவியைப் பார்த்திருக்கிறேன்.நான் பார்த்த முதல் ஹீரோ ஜெயம் ரவிதான்’ என்று சொன்னார். உண்மையில், நான் படம் இயக்க வேண்டும் என்று நினைத்த முதல் ஹீரோ நீங்கள்தான் விஜய்சேதுபதி. உங்களை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன்.
ஒரு நடிகனுக்குத் தேவையான எல்லாமே உங்களிடம் இருக்கிறது. ஏனென்றால், அவர் நல்லா நடித்து எல்லா வேலையும் அவரே செய்துவிடுவார். நல்லா இயக்கியிருக்கேன் என எனக்கு ஈஸியாகப் பெயர் கிடைத்துவிடும்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/F6zb8vkasAA_Bv3.jpg)
நாம் இருவரும் சேர்ந்து நடிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், உங்களை வைத்து படமெடுக்க விரும்புகிறேன். எனக்காக கொஞ்ச நாளைக்கு நீங்கள் உங்களை தேதிகளை ஒதுக்கினால் நல்லா இருக்கும்” என்று விஜய் சேதுபதியிடம் கேட்டுக் கொண்டார்.