இந்தியாவில் 18 வயது ஆன அனைவருக்குமே வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. அவ்வாறு, 18 வயதான அனைவரும் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமையாகும். அதில், பலரும் ஜனநாயக கடமையாற்ற முன்வந்தாலும் சில சமயங்களில் சிலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது. அதற்கான முக்கியகாரணங்களில் ஒன்று, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு போவது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1695626290_969_20230510_160924.jpg)
இந்த நிலையில், தன்னுடைய 93 வயது வரை வாக்களிக்க முடியாமல் இருந்த முதியவர் ஒருவர் தன் வாழ்நாளிலேயே முதல்முறையாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கவிருக்கிறார். தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக அந்தந்த மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலைப் புதுப்பித்தல், சரிபார்த்தல், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல் ஆகிய பணிகள் நடைபெற்றுவருகிறது.
அதன்படி, சத்தீஸ்கரின் கான்கர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா தலைமையில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் விடுபட்ட தகுதியுடைய நபர்களின் பெயர்களைப் பதிவு செய்யும் வேலையில் பூத் நிலை அலுவலர்கள் ஈடுபட்டனர். இதில், பானுபிரதாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பைன்சகன்ஹர் கிராமத்தில், ஷேர் சிங் ஹெட்கோ எனும் 93 வயது முதியவரின் வீட்டுக்கு, அவரின் பேரப்பிள்ளையின் பெயரைப் பதிவு செய்ய பூத் நிலை அலுவலர்கள் சென்றிருக்கின்றனர். அப்போதுதான், ஷேர் சிங் ஹெட்கோ பெயரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதும், இதுவரை ஒருமுறை கூட அவர் வாக்களித்ததே இல்லை என்பதும் தெரியவந்திருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/85556_thumb.jpg)
அதையடுத்து, ஷேர் சிங் ஹெட்கோ வாக்களிப்பதற்கான அனைத்து வேலைகளையும் பூத் நிலை அலுவலர்கள் முறைப்படி செய்தனர். இதனால், ஜனநாயக கடமையாற்றவும், தனக்கான பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதிலும் ஷேர் சிங் ஹெட்கோ ஆர்வமாக இருப்பதாக அவரின் உறவினர் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து பேசிய கான்கர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா, “சில காரணங்களுக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களின் வீட்டுக்கே சென்று, அவர்களின் பெயர்களைச் சேர்ப்பதை உறுதிசெய்தது எங்கள் பூத் நிலை அலுவலர்களின் குறிப்பிடத்தக்க சாதனை. இந்த பயிற்சியின் போது, ஷேர் சிங் ஹெட்கோவின் பெயரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY