பாஜக உடனான கூட்டணி முறிந்ததாக இன்று நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் தமிழக பாஜக-வைக் கண்டித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் கூட்டணி கட்சிகளான அதிமுக -பாஜக ஆகியவை ஆளும் கட்சியான திமுக-வை எதிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாத நிலை இருந்துவந்தது. இந்த நிலையில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே உரசல் […]