Bajaj Pulsar N150 – பஜாஜ் பல்சர் என் 150 பைக்கின் அறிமுக விபரம் வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், 150சிசி சந்தையில் மற்றொரு மாடலாக பல்சர் N150 பைக்கினை விற்பனைக்கு கொண்டு வரவுள்ள நிலையில் டீலர்களை புதிய மாடல் வந்தடைய துவங்கியுள்ளது.

ஏற்கனவே, விற்பனையில் உள்ள பல்சர் P150 பைக்கில் உள்ள என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் பாகங்களை பகிர்ந்து கொள்ள உள்ள பைக்கின் ஸ்டைலிங் அம்சத்தை N160 பைக்கில் இருந்து பெறுகின்றது

Bajaj Pulsar N150

விற்பனையில் கிடைக்கின்ற பஜாஜ் பல்சர் N160 பைக்கின் ஸ்போர்ட்டிவ் ஸ்டைலிங் நேரடியாக பகிர்ந்து கொள்ளுகின்ற புதிய பல்சர் N150 பைக்கில் 150cc  என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 14.5hp  பவர் மற்றும் 13.5Nm டார்க் வெளிப்படுத்தும் இதில் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் பெறுகிறது.

Bajaj pulsar n150

ஒற்றை இருக்கை பெற்ற பல்சர் என்150 பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் ஒற்றை டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் பிரேக் என இரு விதமான வேரியண்ட் கொண்டுள்ளது.

ஸ்போர்ட்டிவ் தோற்றத்தை வெளிப்படுத்துகிற புராஜெக்டர் ஹெட்லைட், நேர்த்தியான பெட்ரோல் டேங்க் எக்ஸ்டென்சன் கொண்டு செமி டிஜிட்டல் கிளஸ்டர் பெற்றதாக அமைந்துள்ளது.

தற்பொழுது முன்பதிவு டீலர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. விரைவில், பஜாஜ் பல்சர் N150 விலை ரூ.1.23 லட்சத்திற்கும் குறைவாக அறிவிக்கப்பட உள்ளது.

Bajaj pulsar n150 red

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.