![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1695703871_NTLRG_20230925160938880839.jpg)
அஜித்துடன் நடிக்கிறாரா தீபக்? – வைரலாகும் புகைப்படங்கள்
சின்னத்திரை பிரபலமான தீபக், நடிகர் அஜித் குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இண்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தனது மனைவியுடன் அஜித் குமாரை சந்தித்த தீபக், அந்த நிகழ்வு ஒரு முறை மட்டுமே நிகழும் நீல நிலவு என்றும், அஜித் குமாரை உண்மையான ஜென்டில்மேன் என்றும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக, அஜித்துடன் அடுத்த படத்தில் தீபக் நடிக்கிறாரா? என்று கேட்டு பலரும் வருகின்றனர். ஆனால், உண்மையில் இந்த புகைப்படங்கள் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விருந்தின் போது எடுக்கப்பட்டது. தீபக் அந்த நண்பருக்கும் அதே பதிவில் நன்றி கூறி பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.