அரியாங்குப்பம்: பூரணாங்குப்பம் அங்கா ளபரமேஸ்வரி அம்மன்கோவிலில் புதிய நிர்வாகஅதிகாரி நியமிக்கப்பட்டார்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் நிர்வாகத்தை ஏற்கனவே அறங்காவலர் குழுவினர் நிர்வகித்து வந்தனர். அதையடுத்து, புதிய நிர்வாக அதிகாரியாக பாஸ்கர் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் சிவசங்கரன் பிறப்பித்துள்ளார். இதையடுத்து கோவிலில், சபாநாயகர் செல்வம் முன்னிலையில் பாஸ்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement