கிழக்கு வாசல் சீரியல் நேரம் மாற்றம்

ராதிகா சரத்குமார் தயாரிக்கும் 'கிழக்கு வாசல்' தொடர் அதிக எதிபார்ப்புகளுக்கிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வெங்கட் ரெங்கநாதன், ரேஷ்மா முரளிதரன், அஸ்வினி ராதகிருஷ்ணா, ரோஜா ஸ்ரீ, அருண் குமார் ராஜன், சிந்து ஷ்யாம் ஆகியோருடன் பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலானது கிட்டத்தட்ட 30 எபிசோடுகளை தாண்டியுள்ள நிலையில் சொல்லிக்கொள்ளும் அளவில் டிஆர்பியில் முன்னேற்றம் அடையவில்லை.

அதேசமயம் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாக உள்ளதால் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த கிழக்கு வாசல் தொடரை மாலை 4 மணிக்கு ஒளிபரப்ப தொலைக்காட்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால், ஒட்டுமொத்த சீரியல் குழுவும் அப்செட்டாகி உள்ளனர். அதிலும், சின்னத்திரையில் முதன்முதலாக என்ட்ரி கொடுத்த எஸ்.ஏ.சி இந்த நேர மாற்றத்தால் மிகவும் வருத்தம்டைந்துள்ளதாக தெரிய வருகிறது. இதன்காரணமாக அவர் சீரியலை விட்டு விலகலாம் எனவும் சின்னத்திரை வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.