வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பழம்பெரும் ஹிந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவருக்கு வயது 85.
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர் வஹீதா ரஹ்மான். 1960, 70களில் சினிமாவில் நடிகையாக பிரபலமானார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி போன்ற மொழிகளில் நடித்துள்ள வஹீதா, தமிழில் எம்ஜிஆர் நடித்த அலிபாபுவும் 40 திருடர்கள் படத்திலும் நடித்தார். கடைசியாக கமலின் விஸ்வரூபம்-2 படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் வஹீதா ரஹ்மானுக்கு இந்தாண்டுக்கான புகழ்மிக்க ‘தாதா சாகேப் பால்கே’ வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement