உலகின் நம்பகமான டிஜிட்டல் ஐடி ஆதார்: மத்திய அரசு விளக்கம்| Centre Counters Moodys Aadhaar Criticism

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஆதார் தொடர்பாக மூடி‛ஸ் தெரிவித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள மத்திய அரசு, உலகின் மிகவும் நம்பகமான டிஜிட்டல் ஐடியாக ஆதார் உள்ளது எனக்கூறியுள்ளது.

தற்போது அரசு தேர்வுகள், நலத்திட்ட உதவி, சலுகைகள் பெறுவது உட்பட எல்லா பணிகளுக்கும் ஆதார் எண் பதிவு அவசியம்.

இந்நிலையில் உலகின் முக்கிய நிதி மற்றும் கடன் தரக்குறியீட்டு நிறுவனங்களில் ஒன்றான மூடி’ஸ் நிறுவனம், ஆதார் கட்டமைப்பில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படலாம். அதிக வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் மிகுந்த வானிலை சூழல் மிகுந்த ஊர்களில் நம்பத்தகுந்த வகையில் பயனாளிகளின் கைரேகை சரிபார்ப்பு முறை வேலை செய்யாது என தெரிவித்திருந்தது.

இதனை நிராகரித்த மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகின் மிகவும் நம்பகமான டிஜிட்டல் ஐடி அமைப்பாக ஆதார் உள்ளது. சர்வதேச அமைப்புகளான ஐஎம்எப், உலக வங்கி ஆகியவை ஆதார் திட்டத்தை பாராட்டி உள்ளன. இதுபோன்ற டிஜிட்டல் அடையாள அமைப்பை அமல்படுத்துவது குறித்து பல்வேறு நாடுகள், ஆதார் திட்டத்தை செயல்படுத்தும் யுஐடிஏஐ அமைப்பை அணுகி உள்ளன.

மூடி‛ஸ் அமைப்பானது, தங்களின் கருத்துகளுக்கு அவர்களின் அறிக்கையில் எந்தவிதமான அடிப்படை ஆதாரமோ அல்லது வேறு விவரங்களையோ வழங்கவில்லை. ஆதாருக்கான இணையதளத்தை மட்டுமே மேற்கோளாக காட்டி உள்ளது. இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.