
உலகளவில் ரூ. 50 கோடி வசூலித்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி
மகேஷ் பாபு இயக்கத்தில் நவின் பொலிஷெட்டி, அனுஷ்கா ஷெட்டி இருவரும் இணைந்து நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளிவந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இரண்டு வாரங்களை கடந்த நிலையில் தற்போது இந்த படம் உலகளவில் ரூ. 50 கோடி வசூலித்ததாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் நவீன் பொலிஷெட்டி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறார். அனுஷ்கா நடித்து சில வருடங்கள் கழித்து வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.