ஓட்டோவா: நாஜி வீரருக்காக தலைவணங்கிய விவகாரத்தில் கடும் விமர்சனம் எழுந்ததையடுத்து, கனடா பாராளுமன்ற சபாநயகர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியா – கனடா இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, செப்.,22ம் தேதி கனடா சென்றார். அங்கு, கனடா பார்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜெர்மனிய சர்வாதிகாரி அடால்ட் ஹிட்லரின் நாஜிப்படை வீரருக்கு ,பிரதமர் ட்ரூடோ உள்பட அனைவரும் எழுந்து நின்று தலைவணங்கி மரியாதை செலுத்தியதால் கடும் விமர்சனத்திற்குள்ளானார்.
இந்த விவகாரத்தில் பாராளுமன்ற சபாநாயகர் ஆண்டனி ரோட்டாவும் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். இதையடுத்து நேற்று சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யவதாக அறிவித்தார். துணை சபாநாயகர் தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement