வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராஜ்கோட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 353 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி தொடரை 2-0 என கைப்பற்றிவிட்டது. மூன்றாவது போட்டி குஜராத்தின் ராஜ்கோட்டில் நடக்கிறது.
இந்திய அணிக்கு ‘ரெகுலர்’ கேப்டன் ரோகித், கோஹ்லி, குல்தீப், சிராஜ் திரும்பினர். சுப்மன், அஷ்வினுக்கு ஓய்வு தரப்பட தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றார். ஆஸ்திரேலிய அணியில் ‘ரெகுலர்’ கேப்டன் கம்மின்ஸ், மிட்சல் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டார்க் இடம்பெற்றனர். ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
வார்னர், மார்ஷ் அரை சதம்
ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், மிட்சல் மார்ஷ் ஜோடி அபார துவக்கம் தந்தது. இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த இருவரும் அரை சதம் விளாசினர். இவர்களை பிரிக்க முடியாமல் பவுலர்கள் திணறினர்.
ஒருவழியாக, பிரசித் கிருஷ்ணா ‘வேகத்தில்’ வார்னர் (56) ஆட்டமிழந்தார். மிட்சல் மார்ஷ் 96 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் கடந்தார். இவர் சிராஜ் பந்துவீச்சில் 74 ரன்னில் அவுட்டானார்.
தன் பங்கிற்கு லபுசேன் (72) அரை சதம் விளாசினார். கேரி (11), மேக்ஸ்வெல் (5) ஏமாற்ற ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 352 ரன் எடுத்தது. கம்மின்ஸ் (19), ஸ்டார்க் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணியின் பும்ரா 3, குல்தீப் 2 விக்கெட் கைப்பற்றினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement