Honda Activa – 2023 ஹோண்டா ஆக்டிவா லிமிடெட் எடிசன் விற்பனைக்கு வெளியானது

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹோண்டா ஆக்டிவா 2023 மாடலின் அடிப்படையில் சிறப்பு பாடி கிராபிக்ஸ் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

மற்றபடி, என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது.

2023 Honda Activa

DLX மற்றும் ஆக்டிவா ஸ்மார்ட் என இரண்டிலும் வந்துள்ள சிறப்பு லிமிடெட் எடிசன் ஸ்கூட்டரில் 109.51cc, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜினைத் தொடர்ந்து பயன்படுத்துகிறது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 7.72 bhp @ 8000 rpm-லும் மற்றும் டார்க் 8.90 Nm @ 5500 rpm-ல் வழங்குகின்றது.

சைலண்ட் ஸ்டார்ட் சிஸ்டம் மற்றும் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை அடங்கும். இது டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகள், ஒற்றை பின்பக்க ஸ்பிரிங் மற்றும் இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் போன்றவற்றை தக்க வைத்துக் கொள்ளுகிறது.

ஸ்மார்ட் கீ ஸ்கூட்டரில் சாவி இல்லாத செயல்பாடுகளை வழங்குகின்றது. இதனால், ரைடர் ஹேண்டில்பார் லாக் அல்லது திறக்க உதவுதல், இருக்கைக்கு அடியில் உள்ள சேமிப்பை பயன்படுத்த மற்றும் முன்புறத்தில் உள்ள சுவிட்சை பயன்படுத்தி எரிபொருள் நிரப்ப மூடியைத் திறப்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளைச் செய்யலாம். பார்க்கிங்கில் உள்ள ஸ்கூட்டரை கண்டறியவும் இதனை பயன்படுத்தலாம். மேலும், ஸ்கூட்டர் திருட்டினை முற்றிலும் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Activa DLX limited edition – ₹ 80,737

Activa Smart Limited edition – ₹ 82,737

Honda Activa limited edition

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.