புதுடெல்லி: வாட்ஸ்அப்பில் ‘‘சேனல்’’ என்ற டெலிகிராம் போன்ற அம்சத்தை இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் சமீபத்தில் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்தது. பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மக்களை தொடர்பு கொண்டு அவர்களுடன் இணைந்திருக்க இந்த சேவை உதவுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் வாட்ஸ்அப் சேனலில் ஒரே வாரத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர். குறிப்பாக, செப்டம்பர் 20-ம் தேதி அன்று ஒரே நாளில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இணைந்தனர். மேலும், பிரதமர் தனது வாட்ஸ்அப் சேனலில் வெளியிட்ட முதல் பதிவுக்கு சில நிமிடங்களில் நூற்றுக்காணக்கான எதிர்வினைகள் வந்தன.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது சேனலில் பகிர்ந்த செய்தியில், “நாங்கல் 50 லட்சத்துக்கும் அதிகமான சமூகமாக மாறியுள்ளோம். உங்கள் ஒவ்வொருவரின் ஈடுபாட்டுக்கும் தொடர்ச்சியான ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.