மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம்

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக பான் இந்தியா நடிகராக பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்திற்கு பிறகு அவரது புகழ் பல மடங்கு பெருகி இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்த நிலையில் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி அருங்காட்சியகத்தில் பிரபாஸின் பாகுபலி உருவத்தோற்றம் கொண்ட மெழுகுச்சிலை வடிவமைக்கப்பட்டு பார்வையாளர்களின் காட்சிக்காக சமீபத்தில் வைக்கப்பட்டது. இது பார்வையாளர்களை வசிகரித்தாலும் பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகடாவுக்கு மகிழ்ச்சியை தரவில்லை.

இதுகுறித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள அவர் கூறும்போது, “இது முறைப்படி உரிமம் பெற்று செய்யப்பட்ட சிலை அல்ல. இது குறித்து எங்களிடம் அனுமதி பெற்றோ அல்லது எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தோ செய்யப்படவில்லை. இந்த சிலையை அகற்றுவது குறித்து நாங்கள் முறைப்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம்” என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து மியூசியத்தில் இருந்து அந்த சிலை விரைவில் அகற்றப்பட உள்ளது

இதுகுறித்து மியூசியம் தரப்பில் கூறும்போது, “தயாரிப்பாளர் இந்த சிலை குறித்த அவரது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.. நாங்கள் யாரையும் சென்டிமெண்டாக வருத்தப்படுத்த விரும்பவில்லை. அதனால் இந்த சிலையை விரைவில் அகற்ற உள்ளோம் என்று கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.