சென்னை: தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27-ந்தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்தியரபிரதா சாகு தெரிவித்து உள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5-ந் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும் என்றும் கூறினார். ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படுவது வழக்கமான நடைமுறை. அதுபோல, இந்த ஆண்டும், அக்டோபர் முதல் […]