வாஷிங்டன்: ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் மைக்கேல் காம்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 82 வயதான மைக்கேல் காம்பன் நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனில்லாமல் மைக்கேல் காம்பன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ஹாரி பாட்டர் போன்ற படங்கள் மூலம் பிரபலமான மைக்கேல் காம்பன் மறைவு, ஹாலிவுட் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.