ஒருநாளைக்கு சராசரியாக 1.15 லட்சம் முறை இருதயம் துடிக்கிறது. உடல் முழுவதும் ரத்தத்தை கொண்டு செல்லும் பணியை இருதயம் மேற்கொள்கிறது. இருதயத்தை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த செப். 29ல் உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாறிய உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, மது, புகையிலை பயன்பாடு, உடல் பருமன், நீரிழிவு, இரவுப்பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இருதய பாதிப்பு ஏற்படுகிறது. ‘இருதயத்தை பயன்படுத்துவோம்; இருதயத்தை தெரிந்து கொள்வோம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement