TMB: ஓட்டுநர் கணக்கில் 9000 கோடி; ஐ.டி ரெய்டு… சர்ச்சைகளுக்கிடையே சி.இ.ஓ ராஜினாமா – பின்னணி!

தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு ’நாடார் வங்கி’ என்ற பெயருடன் கடந்த 1929-ம் ஆண்டு தொடங்கப்பட்ட  தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி,  தற்போது இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 533 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களுடன் இயங்கிவருகிறது. பங்குதாரர்களால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்குப் புதிதல்ல. ஆனால்,  கடந்த ஜூன் 27-ம் தேதி, வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் வங்கியின் வரலாற்றில் முதன்முறையாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.  

பதவியை ராஜினாமா செய்த கிருஷ்ணன்

சோதனையின் நிறைவில் ரூ.4,410 கோடி அளவுக்கு முறையாகக் கணக்கு காட்டவில்லை என வருமான வரித்துறை அறிவித்தது. கடந்த ஐந்து ஆண்டு கணக்குகளை ஆய்வுசெய்தபோது நிதிப் பரிவர்த்தனை அறிக்கையில் முறையாகக் கணக்கு காட்டப்படவில்லை என தெரியவந்திருக்கிறது. ரொக்க முதலீட்டில் 10,000 வங்கிக் கணக்குகளில் ரூ.2,700 கோடியும் கிரெடிட் கார்டு தொடர்பான கணக்கு காட்டுதலில் ரூ.110 கோடியும், டிவிடெண்ட் முதலீட்டில் ரூ.200 கோடியும் மற்றும் பங்குகளில் ரூ.600 கோடியும், பொதுமக்களுக்குக் கொடுக்கப்படவேண்டிய வட்டிகளில் ரூ.500 கோடி ரூபாயும் கணக்கு காட்டப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது எனவும்  கூறப்பட்டது.

இந்த நிலையில், கார் ஓட்டுநர் ஒருவரின் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி டெப்பாசிட் ஆனதாக  குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள நெய்க்காரன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர்ம்  சென்னை கோடம்பாக்கத்தில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த செப்டம்பர் 9-ம் தேதி மாலை 3 மணி அளவில் காரில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது மொபைலுக்கு  ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.  அதில், ராஜ்குமாரின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் இருந்து ரூ.9,000 கோடி டெபாசிட் ஆனதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. தனது வங்கிக் கணக்கில் குறைந்த அளவிலே பணம் இருக்கும் நிலையில், ரூ.9,000 கோடி டெபாசிட் ஆனதாக வங்கியின் பெயரில்  யாரோ தன்னை ஏமாற்ற முயல்கிறார்கள் என நினைத்துள்ளார்.

TMB வங்கி தலைமை அலுவலகம்

இதனையடுத்து தனது வங்கிக் கணக்கில் இருந்து தனது நண்பர் ஒருவருக்கு ரூ.21,000  அனுப்பி சோதனை செய்துள்ளார். நண்பரின் வங்கிக் கணக்கில் ரூ. 21,000 வரவு வைக்கப்பட்டதையடுத்து  ரூ.9,000 கோடி பணம் தன் வங்கிக் கணக்கிற்கு வந்ததை அறிந்து குழப்பம் அடைந்துள்ளார். இந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில்  மீதமுள்ள பணம் அனைத்தையும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டது. தூத்துக்குடியிலுள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ராஜ்குமாரை  தொலைபேசி மூலம் அழைத்து ரூ.9,000 கோடி ரூபாய் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர்   கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளைக்கு வங்கி தரப்பில் இருந்தும் டிரைவர் ராஜ்குமார் தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக, ரூ.9,000 கோடி ரூபாய் பணத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட ரூ.21,000 பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனவும், அதற்குப் பதிலாக வாகன கடன் வழங்குவதாக வங்கி தரப்பில் இருந்து சமரசம் பேசி அனுப்பி வைத்ததாக டிரைவர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் இதுகுறித்து ராஜ்குமார், அந்தப் பணம் யாருடைய பணம் எதற்காக எனது வங்கிக் கணக்கில் அனுப்பப்பட்டது எனது வங்கிக் கணக்கை அவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மீது சைபர் கிரைம் போலீஸார்  மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார்.

TMB வங்கி தலைமை அலுவலகம்

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் சி.இ.ஓவான  கிருஷ்ணன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ராஜினாமா கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலக்குவதாக தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் நிலையில் கிருஷ்ணனின் ராஜினாமா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.