புதுச்சேரி: போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 25 ஆயிரம் பேருக்கு ஒருமுறை மன்னிப்பு வழங்க வேண்டும் என முதல்வருக்கு, ஓ.பி.எஸ்., அணி செயலர் ஓம்சக்தி சேகர் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை:
கடந்த ஆண்டு ஹெல்மெட் கட்டாயம் என்றபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது ஹெல்மெட் கட்டாயம் என்பதை வற்புறுத்த வேண்டாம் என அரசு கூறியது. இந்நிலையில் ஹெல்மெட் அணியாமலும் பல்வேறு சாலை விதிமுறைகளில் ஈடுபட்ட 25 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வது என்பது ஏற்புடையது அல்ல.
போக்குவரத்து போலீசார், மாநிலத்தில் விபத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருவது பாராட்டிற்குரியது. அதே நேரத்தில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேரின், ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்வது என்பது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தும்.
மேலும் அவர்கள் முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் நிலையை போக்குவரத்து துறையே ஏற்படுத்துவதோடு, பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.
எனவே ஒரு முறை மன்னிப்பு என்ற நிலையை அரசு எடுக்க வேண்டும். மக்கள் மீது எப்போதும் தாயுள்ளத்தோடு நலத்திட்டங்களை செய்து வரும் முதல்வர் இந்த 25 ஆயிரம் பேருக்கும் ஒரு முறை மன்னிப்பு என்ற அடிப்படையில் தற்காலிக ஓட்டுநர் உரிமம் ‘சஸ்பெண்ட்’ செய்வதை செய்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement