பாடல் காட்சியுடன் தொடங்கும் விஜய் 68 படப்பிடிப்பு
நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' படம் அக்., 19ல் ரிலீஸாகிறது. இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என சில மாதங்களுக்கு முன்பே அறிவித்தனர். தற்போது இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் அரவிந்த்சாமி, சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் படத்தின் பூஜை நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் 2ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு அடுத்த நாள் (அக்டோபர் 3)ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கத்தில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.