ஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம்| Asian Games: Another silver medal for India in shooting

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஹாங்சு: ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றது. இதனால், இதுவரை இந்தியா 8 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 34 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது.

சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கி சுடுதல் போட்டி

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா இன்று(செப்.,30) வெள்ளி வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங், திவ்யா இணை வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.

இதுவரை இந்தியா 8 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 34 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.