பயிற்சி ஆட்டம் தொடக்கம்
கிரிக்கெட்டின் உட்சபட்ச திருவிழாவான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது என்றாலும், பயிற்சி ஆட்டங்கள் அல்ரெடி தொங்கிவிட்டன. பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் நேற்று விளையாடிய நிலையில் இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தை தற்போதைய சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிராக தொடங்குகிறது. இந்த முறை உலக கோப்பை வெல்லும் அணிகளுக்கான வாய்ப்பில் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளை பலர் தேர்வு செய்திருக்கிறார்கள். இருப்பினும் சிலர் நியூசிலாந்துக்கு பதிலாக பாகிஸ்தான் அணிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் அதிரடி
ஆனால், நாங்கள் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் உறுதியாக இருக்கிறோம் என பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலேயே கம்பீரமாக அதிரடி ஆட்டத்தின் மூலம் சொல்லியிருக்கிறது நியூசிலாந்து. வேகப்பந்துவீச்சின் பவர் ஹவுஸாக இருக்கும் பாகிஸ்தான் அணியின் பவுலிங்கையே புரட்டி எடுத்து 345 ரன்கள் என்ற இலக்கை 6 ஓவர்கள் மீதம் வைத்து எட்டியிருக்கிறது நியூசிலாந்து. இது அடி இல்லை, எங்களோட இடி தாக்குதல் என பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை விளாசி தள்ளிவிட்டனர். முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கை குறை சொல்ல முடியாது. ஏனென்றால் அந்த அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்தனர்.
சரவெடி காட்டிய நியூசிலாந்து
பாபர் அசாம் 80, ரிஸ்வான் 103, சஹீல் 75, சல்மான் 33 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை சிறப்பாக எட்ட உதவினர். ஆனால், அதன்பிறகு இடியுடன் கூடிய புயல் வரும் என அவர்கள் துளியும் என எதிர்பார்க்கவில்லை. ஹரீஸ் ராவுப், ஹசன் அலி என வேகப்பந்துவீச்சு படையை இறக்க, அதனைப் பற்றி துளியும் கவலை இல்லாமல் வெளுத்து வாங்கியது நியூசிலாந்து கருப்பு படை. முடிவில் அந்த அணி 43.3 ஓவரில் 346 ரன்கள் எடுத்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தனர். காயத்தில் இருந்து குணமடைந்து வந்த கனே வில்லியம்சன் 54 ரன்கள் அடித்தார்.