கொல்கத்தா: டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்கை ஏர் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ட்ரோன்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக பொருட்களை விநியோகம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது.
தற்போது இந்நிறுவனம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ட்ரோன் சேவையை தொடங்க உள்ளது. இதுகுறித்து ஸ்கை ஏர் நிறுவன துணைத் தலைவர் இஷான் குல்லார் கூறும்போது, ‘‘கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் ட்ரோன்கள் மூலம் மளிகை பொருட்கள், மருந்து பொருட்களை ட்ரோன்கள் மூலம் விநியோகம் செய்ய உள்ளூர் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். முதல்கட்டமாக நியூ டவுன் பகுதியில் பொருட்களை ட்ரோன்கள் வாயிலாக விநியோகம் செய்வோம்’’ என்றார்.