வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவிற்கு சென்ற, அந்நாட்டிற்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமியை, பிரிவினைவாத சீக்கிய அமைப்பை சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கவ் நகரில் உள்ள குருத்வாராவிற்கு நேற்று(செப்.,29) விக்ரம் துரைசாமி சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பிரிட்டனில் வசிக்கும் சீக்கிய பிரிவினைவாதிகள், ‛உங்களை வரவேற்கவில்லை’ எனக்கூறி தடுத்து நிறுத்தினர்.
இது தொடர்பாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கூறுகையில், குருத்வாரா கமிட்டியினரை சந்திக்க விக்ரம் துரைசாமி வந்திருந்தார். இது எங்களுக்கு தெரியவந்தது. சிலர் அவரை வழிமறித்து, உங்களை நாங்கள் வரவேற்கவில்லை எனக்கூறினோம். அப்போது இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், குருத்வாரா நிர்வாகிகள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், பிரிட்டனில் உள்ள எந்த குருத்வாராவிற்கும் இந்திய அதிகாரிகளை செல்ல அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement