மூணாறு: தமிழகத்தில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில் போடிநாயக்கனூரைச் சேர்ந்த ஜோதி 45 க்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் , ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவர் 2017 செப்.23ல் தமிழகத்தில் இருந்து கடத்தி வந்த 1.8 கிலோ கஞ்சாவுடன் இடுக்கி மாவட்டம் ராஜகுமாரியில் வைத்து அன்றைய ராஜாக்காடு எஸ்.ஐ. அனுப் கைது செய்தார். அடிமாலி இன்ஸ்பெக்டர் சாபு சம்பவம் குறித்து விசாரித்து தொடுபுழா என்.டி.பி.எஸ். சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிகுமார், ஜோதிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். .
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement