ரச்சிதாவுடன் விவாகரத்தா? பிக்பாஸ் எண்ட்ரியா? நடிகர் தினேஷ் விளக்கம்
பிரபல சீரியல் நடிகர்களான ரச்சிதா மகாலெட்சுமியும் தினேஷும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில பிரச்னைகளால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதிலும், பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா இருந்த போது தினேஷ் எவ்வளவோ தனது சப்போர்ட்டை ரச்சிதாவுக்காக கொடுத்தார். ஆனாலும், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ரச்சிதா தினேஷை கண்டு கொள்ளவேயில்லை. இதற்கிடையில் தினேஷ் மீது ரச்சிதா போலீஸ் புகார் அளிக்க, அதன்பின் அது விவாகரத்து வழக்காக நீதிமன்றத்துக்கு சென்றது.
இந்நிலையில், அண்மையில் பேட்டியளித்துள்ள தினேஷ், 'எனக்கும் ரச்சிதாவுக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லை. வழக்கு தான் போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறியுள்ளார். மேலும், பிக்பாஸில் ரச்சிதா கலந்து கொண்ட போது ரச்சிதா வெற்றி பெற வேண்டுமென்று நினைத்ததாகவும், ஒருவேளை நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தால் டைட்டில் பட்டத்தை வென்று அவருக்கு கொடுக்கலாம் என்று இருந்ததாகவும் கூறியுள்ளார். தற்போது சீரியலில் பிசியாக நடித்து வருவதால் பிக்பாஸில் கலந்து கொள்ள விருப்பமில்லை என்றும் தினேஷ் கூறியுள்ளார்.