கார் வாங்கிய பாவ்னி – அமீர் ஜோடி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் புகழ் பெற்ற அமீர் – பாவ்னி ஜோடி தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து எப்போது இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், திருமணம் செய்யாமலேயே திருமணமான ஜோடி போல ஒன்றாக டூர் செல்வது, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, பேட்டி கொடுப்பது என இருவரும் செய்து வருகின்றனர். இந்நிலையில், இருவரும் சேர்ந்து தற்போது ஜோடியாக ஒரு காரை வாங்கி போஸ் கொடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் சீக்கிரமாகவே திருமணத்தையும் முடிக்க சொல்லி வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.