மைசூரு, நாட்டிலேயே முதன் முறையாக, மைசூரில் செயல்படுத்தப்பட்ட வாடகைக்கு, ‘டிரிங் டிரிங்’ மின் சைக்கிள் திட்டம், பொதுமக்களுக்கு மிகவும் பயனளிக்கிறது.
கர்நாடகா மாநிலம் மைசூரில் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், சில ஆண்டுகளுக்கு முன், ‘டிரிங் டிரிங்’ வாடகை சைக்கிள் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டத்தை செயல்படுத்திய, நாட்டின் முதல் நகர் என்ற பெருமை மைசூருக்கு கிடைத்தது.
மைசூரு மாநக ராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டம், பொதுமக்கள், சுற்றுலா பயணியருக்கு உதவியாக உள்ளது.
வெளி மாவட்டம், மாநிலம், நாடுகளில் இருந்து மைசூருக்கு வரும் சுற்றுலா பயணியர் பலரும், பஸ், கார்களை தவிர்த்து வாடகை சைக்கிள்களில் நகரை சுற்றி வருகின்றனர்.
வாடகை அடிப்படையில் சைக்கிள்கள் கிடைக்கின்றன. நிர்ணயித்த தொகையை செலுத்தி, சைக்கிளை கொண்டு செல்லலாம்.
இந்த சைக்கிள்கள், தானியங்கி ஸ்மார்ட் லாக் சிஸ்டம் கொண்டவை. கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள, ‘மை பைக்’ செயலியை பதிவேற்றம் செய்து, சைக்கிள்களை பயன்படுத்தலாம்.
மின் சைக்கிள் என்பதால் அனைவரும் எளிதில் ஓட்டிச் செல்ல முடிகிறது.
தசரா நெருங்குவதால், வாடகை சைக்கிள்கள் பயன்பாடு அதிகரிக்கும்.
மைசூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
இம்முறை தசரா வுக்கு, லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர், மைசூருக்கு வருகை தருவர். எனவே வாடகை சைக்கிள் பயன்பாடு அதிகரிக்கும்.
திட்டம் வெற்றிகரமாக செயல்படும். மாணவர் – மாணவியர், பொதுமக்கள், சுற்றுலா பயணியர் என, அனைவரும் வரவேற்றுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்