ஹாங்சு: ஆசிய விளையாட்டு போட்டியில், துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கப் பதக்கமும், கோல்ப் போட்டியில் வெள்ளி பதக்கமும் இன்று(அக்.,01) இந்தியா வென்றுள்ளது. இதனால், இந்தியா 11 தங்கம், 15 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களை வென்று இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர்.
கோல்ப் போட்டி
கோல்ப் போட்டியில் தனி நபர் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றுள்ளது. இதனால் ஆசிய விளையாட்டுகளில், கோல்ப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அதிதி அசோக் பெற்றார்.
துப்பாக்கி சுடுதல்
துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது. 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் டிராப் போட்டியில் இந்திய ஆடவர் அணி 361 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது.
இதுவரை இந்தியா 11 தங்கம், 15 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement